Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.4,000 கோடிக்கும் அதிகமான புதிய ஆர்டர்கள் - பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம் தகவல்

ரூ.4,000 கோடிக்கும் அதிகமான புதிய ஆர்டர்கள் - பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம் தகவல்

மின் உற்பத்தியாளர்கள், மாட்யூல் தயாரிப்பாளர்கள், பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வழங்கிய ஆர்டர்களில், 2,308 மெகாவாட் சூரிய மின்கலங்கள், மாட்யூல்கள் விநியோகமும், மின் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளும் அடங்கும்.

பகிரவும் WhatsApp Facebook

பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம், 2026–27 நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவை பல்வேறு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளன.

மின் உற்பத்தியாளர்கள், மாட்யூல் தயாரிப்பாளர்கள், பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வழங்கிய ஆர்டர்களில், 2,308 மெகாவாட் சூரிய மின்கலங்கள், மாட்யூல்கள் விநியோகமும், மின் திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளும் அடங்கும்.

நிறுவனத்தின் மாட்யூல் உற்பத்தித்திறன் கிட்டத்தட்ட இருமடங்காகி 11.1 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. ஆந்திராவின் நாயுடுபேட்டையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட ஏழு ஜிகாவாட் டாப்கான் ஆலையால், மின்கல உற்பத்தித்திறன் 3.6 ஜிகாவாட்டிலிருந்து 10.6 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் ஆர்டர்கள், நிறுவனத்தின் வளர்ச்சி உத்திக்கும் செயலாக்கத் திறனுக்கும் வலுவான அங்கீகாரமாக அமைந்துள்ளதாக நிர்வாக இயக்குநர் சிரஞ்சீவ் சலுஜா கூறினார்.

முந்தைய செய்தி
தார்ப்பாலின், நிழல்வலை திருச்சியில் 20 சதவீதம் வரை விலை உயர்வு
அடுத்த செய்தி
அதானி கிரீன் மின் உற்பத்தித் திறன் 24% உயர்வு

தொடர்புடைய செய்திகள்